top of page
Search

தேவியானவள் தான் மேலான தெய்வம் என்பதற்கு வேறு காரணத்தையும் நிரூபிக்க வேண்டுமோ!

  • Writer: E Hariharasivam
    E Hariharasivam
  • May 7, 2023
  • 1 min read

ஶிவஃ ஶக்த்யா யுக்தோ யதி பவதி ஶக்தஃ ப்ரபவிதும்

ந சேதேவம் தேவோ ந கலு குஶலஃ ஸ்பந்திதுமபி|

அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி ரபி

ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி|| 1 |

– Soundaryalahari 1






பராசக்தியான ஜகன் மாதா பரதேவதை ஸகல தேவதைகளுக்குள் உத்க்ருஷ்டமான(மிக சக்தி வாய்ந்த , உயர்ந்த) தேவதை என்று ஸ்ரீ சங்கரபகவத்பாதாளால் புகழப்படுகிறாள். அந்தப் பரதேவதையினுடைய ஸாந்நித்தியரூபமானஸம்பந்தம், இல்லாதபோனால், சகல வேதங்களால் சொல்லப்படும் பரமசிவன் என்ற பிரம்மத்திற்கும் யாது ஒரு விதமான காரியத்தை செய்வதிலும் ஸாமர்த்தியம் ஏற்படுவதில்லை. பராசக்தியோடு பரமசிவன் கூடியிருக்கும் போது தான் உலகத்தினுடைய ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அனுக்ரஹம் என்ற ஐந்து விதமான காரியங்களையும் செய்து தன்னிடத்தில் உள்ள ஈஸ்வரத்துவம் என்ற தன்மையை அவர் ப்ரகடனம் செய்து கொள்கிறார். இதனால் எந்த தேவியின் உடைய ஸம்பந்தத்தினால் ஸம்பந்தத்தினால் “தான் பரம்பொருளாகிய பரமசிவனுக்கு கூட ஜகத் காரணத்துவம் என்ற தன்மையானது”ஸித்திக்கின்றதோ அந்த தேவியானவள் தான் மேலான தெய்வம் என்பதற்கு வேறு காரணத்தையும் நிரூபிக்க வேண்டுமோ!





எல்லாம் வல்ல பரதேவதையை பூஜிக்க, ஸ்மரிக்க வேண்டும் என்று மனம் வருவது ரொம்பவும் அரிது தான். பரமசிவன் உடைய திரு அவதாரமாகவோ அல்லது இனி ஜென்ம எடுக்க கூடிய கர்மா இல்லாமல் சகல கர்மாக்களையும் அனுபவித்து ஒழித்தவனாகவோ இருக்கும் புண்ணிய ஜனத்துக்கு தான் பராசக்தியினுடைய பூஜையிலோ, அவளுடைய மகிமையை விளக்கி காட்டுகிற மஹா மந்திரத்திலோ குரு முகமாக உபதேசம் செய்து கொண்டு ஜபம் செய்வதிலோ அதிகாரம் ஏற்படும். அதில்,


யதி வா பச்சிமம் ஜந்ம யதி வா சங்கர ஸ்வயம்!

தேனைவ லப்யதே வித்யா ஸ்ரீமத்பஞ்சதசாக்ஷரி!!


என்ற சாஸ்திரமே ப்ராமாணமாகும்.


விஷ்ணு, பிரம்மா, ருத்ரன் முதலான தேவர்களால் பூஜிக்க தகுந்தவளான இப் பரதேவதையை நாம் நமஸ்கரிக்கவோ அல்லது அவள் பெயரை உச்சரிக்கவோ, ஸ்மரிக்கவோ, நாம் சென்ற ஜென்மங்களில் அளவிட கூட முடியாத பல புண்ணியங்களை செய்திருக்க வேண்டும்..





ஆகையால், ரொம்பவும் அரிதான மானிட ஜென்மாவை அடைந்தவர்கள் ஸர்வ லோகத்திற்கும் மாதாவான பராசக்தி என்ற பர தேவதையை உபாஸிக்க வேண்டியது மிகவும் அவஸ்யமாகும்.


 
 
 

Comments


CONTACT

Sivasri E.Hariharasivam
Sri Vidya Upasagar,

Mobile : +91 98408 71007 

Selvi. Jagadheeswari
Mobile  : +91 72999 90451

Email: shreem2007@gmail.com

ADDRESS

Sri Vidya Upasagar,
Sri Anandhavalli Krupa, Agraharam,
Semmangudi - 612 603

SUBSCRIBE FOR EMAILS

©   Shri Anandhavalli Sametha Shri Agastheswarar Temple, 2018

Design by artbrats101

bottom of page