ஸ்ரீ குரு உபாசனை மற்றும் ஸ்ரீ குருபக்தி பலன்கள்
- E Hariharasivam

- Jan 10, 2019
- 1 min read

ஸ்ரீ குரு உபாசனை மற்றும் ஸ்ரீ குருபக்தி பலன்களின் தொடர்ச்சி
“கு³ருப⁴க்தப்ரியகரம் மஹாதா³ரித்³ர்யநாஶநம்”
ஸ்ரீ குருபக்தியானது மஹா தாரித்ரயங்களையும் பொசுக்கிவிடும்
ப்³ரஹ்மஹத்யா ஸுராபாநம் பரஸ்த்ரீக³மநம் ததா²
பரத்³ரவ்யாபஹரணம் பரதோ³ஷஸமந்விதம் ।
ஸ்ரீ குரு பக்தியானது ப்ரஹ்ம ஹத்தி தோஷம்,களவினால் உண்டான பாபம் மற்றும் ஸகல பாபங்களையும் பொசுக்கிவிடும்
மாநஸம் வாசிகம் காயம் யத்பாபம் பாபஸம்ப⁴வம்
ரோகா³ர்த்தோ முச்யதே ரோகா³த்ப³த்³தோ⁴ முச்யேத ப³ந்த⁴நாத்
வாயினாலும்,மனதாலும்,கார்யங்களினாலும் நமக்கு ஏற்பட்ட பாபத்தை பொசுக்கி அந்த பாபங்களினால் நமக்கு ஏற்பட்டுள்ள வ்யாதியை நாஶம் செய்து ஸகல விதமான இன்னல்களிலிருந்தும் விடுவித்து நமக்கு ஒரு கவசமாக விளங்கும்

கு³ர்விணீ விந்த³தே புத்ரம் கந்யா விந்த³தி ஸத்பதிம் ।
ராஜாநோ வஶதாம் யாந்தி கிம்புந: க்ஷுத்³ரமாநுஷா: ॥
ஸ்ரீ குருபக்தியானது குழந்தையில்லாதவர்களுக்கு மழலைச்செல்வம் அருளும். கன்னிகைகளுக்கு நல்ல வரனை அளிக்கும்.ஸகல மனிதர்களும் ஏன் ராஜ்யமுமே தன்வஶமாகும்.
யத்³யத்³வாஞ்ச²தி சித்தே து ப்ராப்நோதி கு³ருப⁴க்தித: ।
ஸ்ரீ குருபத்தியானது உனக்கு என்னென்ன ஞாயமான ஆசைகள் உள்ளதோ அத்தனையையும் நிறவேற்றித்தரும் கற்பகவ்ருக்ஷம்.
ந மாரீ ந ச து³ர்பி⁴க்ஷம் நோபஸர்க³ம் ப⁴யம் க்வசித் ॥
ஸர்பாதி³பூ⁴தயக்ஷாத்³யா நஶ்யந்தே நாத்ர ஸம்ஶய: ।
ஶ்ரீகு³ருர்வா மஹாதே³வி! வஸேத்தஸ்ய க்³ருʼஹே ததா²
ஶ்ரீகு³ரோ: க்ருʼபயா ஶிஷ்யோ ப்³ரஹ்மஸாயுஜ்யமாப்நுயாத் ॥
எந்த க்ரஹத்தில் ஸ்ரீ ஸத்குருவிற்கு உண்மையான பூஜைகள் பக்தியுடன் நடைபெறுகிறதோ அங்கு அனைத்து இன்னல்களும் காலக்ரமத்தில் பூரணமாக விலகி அந்த க்ரஹத்தில் லோகமாதாவான பராஶக்தி ஸாக்ஷாத் ராஜராஜேஸ்வரி வீற்றிருந்து அருள்பாளிப்பாள் இது ஸத்யம் இதுவே ஸத்யம்.மேலும் அந்த ஸச்சிதானந்தமூர்த்தியின் அனுக்ரஹ விசேஷத்தினால் ஶிஷ்யனோ ப்ரஹ்மஸாயுஜ்யத்தை அடைகிறான்.

இது ஸம்மோஹன தந்த்ரத்தில் அந்த லோகரக்ஷகன் மோக்ஷகாரகன் ஸதாஶிவன் அனுக்ரஹித்தது .
இன்னும் என்ன வேண்டும் இந்த ஜென்மத்தில் நமக்கு. அத்தனையையும் அளிக்கும் கற்பக வ்ருக்ஷமாக நமக்கு ஸத்குருநாதன் நமக்கு துணையாக இருக்கும்பொழுது. ஆம் வேறெங்கும் நாம் அலையவோ தேடவோ தேவையேயில்லை. ஆக நாமும் ஸத்குருநாதனின் சரணகமலத்தில் சரணடைவோம்.
ஜெய் ஸத்குரு மஹாராஜ் கீ ஜெய்
ஸ்ரீ ஆனந்தவல்லி பாஹிமாம் ஸ்ரீ ஆனந்தவல்லி ரக்ஷமாம்
ஸ்ரீ ஆனந்தவல்லி அகஸ்தீஸ்வராய மங்களம்




Comments